search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பிக்கையில்லா தீர்மானம்"

    பாஜகவின் பாதையை நாங்கள் பின்பற்றி இருந்தால் ஜனநாயகம் என்றைக்கோ அழிந்திருக்கும் என நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

    70 வருடங்களாக 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இந்தியா முழுவதும் 6,23,000 கிராமங்கள் உள்ளது. நீங்கள் 4 வருடங்களில் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்து இருந்தாலும், நாங்கள் 6 லட்சம் கிராமங்களுக்கு மின்சார வசதியை செய்துக் கொடுத்தோம். இது வளர்ச்சி கிடையாதா?. 

    பா.ஜ.க எங்களுடைய பணியை ஒருபோதும் அங்கீகரித்தது கிடையாது எங்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது. பா.ஜ.க முதலில் தன்னுடைய குறையை பார்த்துக் கொள்வது கிடையாது.
     
    நாங்கள் உங்களுடைய பாதையை பயன்படுத்தியிருந்தால் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே ஜனநாயகம் அழிந்து இருக்கும். காங்கிரஸ் எப்போதுமே ஜனநாயகத்தை பாதுகாக்கவே முயற்சிகளை மேற்கொண்டது.  பா.ஜ.க அரசு அதானி மற்றும் அம்பானி பற்றி பேசுகிறது. ஆனால், விவசாயிகள் குறித்து பேசுவது கிடையாது. 

    நீங்கள் இந்து கடவுள் ராமர் மற்றும் கிருஷ்ணா பற்றி பேசுகிறீர்கள். ஆனால், மகாபாரத்தில் உள்ள பிறரை பற்றி பேசுவது கிடையாது. 

    என அவர் பேசினார்.
    மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடந்து வரும் நிலையில், இது தொடர்பான #NoConfidenceMotion மற்றும் #RahulGandhi ஆகிய இரு ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பலரும் கருத்து கூறி வருவதால் #NoConfidenceMotion என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. சுமார் 3 லட்சம் ட்வீட்டுகள் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளன.

    அதேபோல், #RahulGandhi என்ற ஹேஷ்டேக்கும் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ராகுல்கந்தி இன்று மக்களவையில் பேசிய பேச்சு மற்றும் அவர் மோடியை கட்டியணைத்து வாழ்த்து பெற்றது போன்ற செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் ட்வீட்டுகள் ராகுல் காந்தியை மையப்படுத்தி பதிவிடப்பட்டுள்ளன.
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    மக்களவையில் தனது உரையை முடித்த பின்னர் மோடியை ராகுல் கட்டிப்பிடித்ததற்கு கருத்து தெரிவித்த பாஜக பெண் எம்.பி பாதல், “கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது இடமில்லை” என கூறினார். #NoConfidenceMotion #RahulHugsModi
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார். தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற அவர் மோடியை கட்டிப்பிடித்தார்.

    மோடியும் சிரித்துக்கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து பேசிய பாஜக பெண் எம்.பி பாதல், “முன்னா பாய் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது உகந்த இடமில்லை” என தெரிவித்தார். இதனை அடுத்து பாதலை சபாநாயகர் உட்கார வைத்தார். (முன்னாபாய் என்ற இந்தி படத்தில் அனைவரையும் கட்டிப்பிடித்து அமைதிப்படுத்துவது போல காட்சிகள் இருக்கும். தமிழில் இது வசூல்ராஜா என்ற பெயரில் வெளியானது)

    ராகுல் காந்தி பாலிவுட்டில் நடிக்க போகலாம் என மற்றொரு பாஜக பெண் எம்.பி கிரண் கெர் தெரிவித்தார். “ராகுல் வயதளவில் வளர்ந்து விட்டாலும் அவர் குழந்தை போல நடந்து கொள்கிறார்” என ராகுலின் கட்டிப்பிடித்தல் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் கூறியுள்ளார்.
    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். #RahulHugsModi #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    குறிப்பாக ரபேல் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு பொய்யர் என ராகுல் கூறினார். இதற்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், அவை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் அவை கூடியதும் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.

    தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
    நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தார்மீக ஆதரவு என்று ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் ஆதரவு? என மைத்ரேயன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். #NoConfidenceMotion #MKStalin
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை அவையில் ஆதரிக்க முடியாது என்றாலும், திமுக தார்மீக ஆதவை அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள அதிமுக எம்.பி. மைத்ரேயன், “திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன. #MansoonSession #TeluguDesam #NDA
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இன்னும், மூன்று கூட்டத்தொடர்கள் மட்டுமே மீதம் இருப்பதால் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருகிறது. இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், அவை சுமுகமாக நடக்க எம்.பி.க்கள் உதவ வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், நாளை தீர்மானத்தை கொண்டு வர அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தருவோம் என ஆர்.ஜே.டி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

    நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய அபாயம் இல்லை என்றாலும், இது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. இக்கூட்டத்தில், ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால் எப்படி முறியடிப்பது என்பது ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

    ×